"தபுவை பார்த்து பொறாமைப்பட்டேன்"... பல ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த சோனாலி குல்கர்னி

’மாச்சிஸ்’ படத்தில் நடித்ததற்காக, தபு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.
"தபுவை பார்த்து பொறாமைப்பட்டேன்"... பல ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த சோனாலி குல்கர்னி
Published on

மும்பை,

நடிகை தபு தேசிய விருது வென்றபோது, அவர் மீது தனக்கு கோபமும் பொறாமையும் இருந்ததாக நடிகை சோனாலி குல்கர்னி பல ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்துள்ளார்.

'மாச்சிஸ்'

1996-ம் ஆண்டு வெளியான இயக்குநர் குல்சாரின் திரில்லர் திரைப்படமான ’மாச்சிஸ்’ படத்தில் நடித்ததற்காக, தபு 1997-ம் ஆண்டு தனது முதல் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். அதே ஆண்டில், இயக்குநர் அமோல் பாலேகர் இயக்கிய விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’தாயரா’ திரைப்படத்தில் நடித்த சோனாலி குல்கர்னியும் தேசிய விருதுக்கான போட்டியில் இருந்தார்.

பொறாமை

இந்நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய சோனாலி, தபு தேசிய விருது வென்றபோது, அவர் மீது தனக்கு கோபமும் பொறாமையும் இருந்ததாக கூறினார். அவர் பேசுகையில்,

"விருதுகளை வென்ற அனைவரின் மீதும் எனக்கு பொறாமை இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் எனது திரைப்படங்கள் தேசிய விருதின் இறுதி சுற்று வரை சென்றன. ஆனால், இறுதியில் எனக்கு ஏமாற்றமே கிடைத்தது. அந்த காலத்தில் தேசிய விருது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. மற்ற விருதுகளை வென்றாலும், கிடைக்காத ஒன்றின் மீதுதான் அதிக ஏக்கம் இருக்கும்.

தபுவின் மீது இருந்த கோபம் மற்றும் பொறாமையால் தான் ’மாச்சிஸ்’ படத்தை பார்த்தேன். ஆனால், அந்தப் படத்தில் அவரது நடிப்பை பார்த்த பிறகு, என்னுள் இருந்த உணர்வும் ஆதங்கமும் மறைந்துவிட்டன" என்று கூறினார்.

தேசிய விருது

சோனாலி குல்கர்னி, பின்னர் 2002-ம் ஆண்டு கிராந்தி கானாடே இயக்கிய ’சைத்ரா’ என்ற மராத்தி குறும்படத்திற்காக சிறப்பு ஜூரி பிரிவில் தேசிய விருதை வென்று தனது நீண்டநாள் கனவை நனவாக்கினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com