சவுந்தர்யா பயணித்த ஹெலிகாப்டரில் நானும் செல்ல இருந்தது... மீனா உடைத்த பகீர் ரகசியம்


சவுந்தர்யா பயணித்த ஹெலிகாப்டரில் நானும் செல்ல இருந்தது... மீனா உடைத்த பகீர் ரகசியம்
x

நடிகை சவுந்தர்யாவின் உயிரை பறித்த ஹெலிகாப்டரில் தானும் செல்ல வேண்டியிருந்தது என நடிகை மீனா  பகீர் தகவலை பகிர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சவுந்தர்யா. தமிழில் நடிகர் கார்த்திக்குடன் இவர் நடித்த பொன்னுமணி படம் சவுந்தர்யாவுக்கு பெரும் புகழை தேடி தந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் அருணாச்சலம், படையப்பா, காதலா காதலா, சொக்கத்தங்கம் என ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் முன்னணி நடிகர்கள் அனைவருடன் நடித்து புகழ் பெற்றார். இதேபோன்று தெலுங்கிலும் இவர் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, மோகன்பாபு என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் இவர் 2003-ம் ஆண்டில் உறவினர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார்.

இந்நிலையில், கடந்த 2004 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தேர்தல் பிரச்சாரத்திற்காக நடிகை சவுந்தர்யா பெங்களூருவில் இருந்து தெலங்கானா மாநிலம் கரீம்நகருக்கு செஸ்னா-180 ரக சிறப்பு விமானத்தில் புறப்பட்டார். அவருடன் அவரது சகோதரர் அமர்நாத்தும் உடன் இருந்தார். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம், பெங்களூரு வேளாண் பல்கலை கழகத்தின், காந்தி க்ருஷி விஷன் கேந்திரா வளாகத்தில் தீப்பிடித்து விழுந்தது. இந்த கோர விபத்தில் சவுர்யாவும், அவரது சகோதரர் அமர்நாத்தும் பரிதாபமாக உடல் கருகி உயிர் இழந்தனர்.

இந்த சம்பவம் நடந்து சுமார் 21 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், நடிகை மீனா பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் ஜெயம்மு நிச்சயம்முறா நிகழ்ச்சியில் மீனா கலந்து கொண்டார். தனது திரைப்பயணம், குடும்பம் குறித்து மீனா பகிர்ந்து கொண்டார். அப்போது ஜெகபதி பாபு ஒரு புகைப்படத்தைக் காண்பித்து, இதைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது என்று கேட்டார். அந்தப் புகைப்படத்தில் போலீஸ் உடையில் சவுந்தர்யாவுடன் மீனா இருந்தார். அதைப் பார்த்ததும் மீனா உருக்கமாகப் பேசினார்.

2004ஆம் ஆண்டு நடிகை சவுந்தர்யாவின் உயிரை பறித்த ஹெலிகாப்டரில் தானும் செல்ல வேண்டியிருந்தது. என்னையும் அழைத்தனர். ஆனால்,சூழ்நிலை காரணமாக தவிர்த்து விட்டேன். என்னையும் அழைத்தார்கள். ஆனால் எனக்கு அரசியல், பிரச்சாரம் பிடிக்காது. அதனால் படப்பிடிப்பு இருப்பதாகச் சொல்லி நான் மறுத்துவிட்டேன்” என்ற பகீர் தகவலை பகிர்ந்துள்ளார்.

1 More update

Next Story