"நிறைய இடங்களில் தனுஷை பார்த்து வியந்தேன்" - நடிகர் அருண் விஜய்


I was surprised to see Dhanush in many places - Actor Arun Vijay
x
தினத்தந்தி 15 Sept 2025 6:53 AM IST (Updated: 15 Sept 2025 1:24 PM IST)
t-max-icont-min-icon

இட்லி கடை படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கும்நிலையில், நேற்று அப்படத்தின் இசை வெளியீட்டு சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது. இதில், அருண் விஜய் கலந்துகொண்டு பேசுகையில்,

''ராயன் படம் பார்த்த பிறகு தனுஷின் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என ஆசைப்பட்டேன். அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவேவில்லை. தனுஷை பார்த்து நிறைய இடங்களில் வியந்திருக்கிறேன்.

நான் நிறைய இயக்குனருடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால், தனுஷின் ஸ்டைல் எனக்கு வியப்பாக இருந்தது. 'இட்லி கடை' படம் ரசிகர்களுக்கு மட்டுமில்ல, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிடித்த படமாக இருக்கும்'' என்றார்.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

1 More update

Next Story