“சினிமா பின்புலம் இல்லாமல் உயர்ந்தேன்” -நடிகை ரகுல்பிரீத் சிங்

சினிமா பின்புலம் இல்லாமல் உயர்ந்தேன் என்று நடிகை ரகுல்பிரீத் சிங் கூறியுள்ளார்.
“சினிமா பின்புலம் இல்லாமல் உயர்ந்தேன்” -நடிகை ரகுல்பிரீத் சிங்
Published on

கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தேன். யாருடைய ஆதரவும் இல்லாமல் என் மீது இருந்த நம்பிக்கையில் இந்த துறையில் அடியெடுத்து வைத்தேன். எனக்கு வந்த பட வாய்ப்புகளை நல்ல படியாக உபயோகப்படுத்திக் கொண்டேன். தொடர்ந்து படங்களில் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டே இருக்கும் நிலைக்கு இப்போது வளர்ந்து விட்டேன். இந்த பயணத்தை நினைத்து பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. கதாநாயகிகள் சினிமாவில் கொஞ்ச காலம்தான் நிலைத்து இருக்க முடியும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். நானும் இந்த துறைக்கு ஒரு 5 வருடங்களாவது இருந்தால் போதும் என்ற வேகத்தோடுதான் வந்தேன். ஆனால் கடவுள் ஆசிர்வாதம் ரசிகர்கள் ஆதரவோடு 10 ஆண்டுகளை எனது பயணம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஒரு நடிகையாக என்னை இன்னும் மெருகேற்ற வேண்டி இருக்கிறது. ரசிகர்கள் மனதில் நிற்கிற மாதிரி மேலும் சில சிறந்த கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். நான் நடிக்கிற ஒவ்வொரு படத்தையும் எனது முதல் படம் மாதிரி நினைத்து உழைக்கிறேன். கொரோனா முடிந்து படப்பிடிப்பு அரங்குக்கு செல்லும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com