தமிழில் இவர்களை வைத்து தான் படம் இயக்குவேன் - புஷ்பா பட இயக்குனர் சுகுமார்


தமிழில் இவர்களை வைத்து தான் படம் இயக்குவேன் - புஷ்பா பட இயக்குனர் சுகுமார்
x

அல்லு அர்ஜுனை வைத்து சுகுமார் இயக்கிய 'புஷ்பா 2' படம் ரூ.1,800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

சென்னை,

தெலுங்கு சினிமாவின் பிரபலமான இயக்குனர் சுகுமார். இவர் 2004-ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஆர்யா' என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரது இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு புஷ்பா படம் வெளியானது. இப்படம் ரூ.450 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

அதனை தொடர்ந்து சமீபத்தில் 'புஷ்பா 2 தி ரூல்' படம் வெளியானது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பான் இந்தியா அளவில் வெளியான இப்படம் ரூ.1,800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கூடிய விரைவில் 3-வது பாகத்தையும் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இயக்குனர் சுகுமார் சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது நீங்கள் தமிழில் படம் எடுத்தால் எந்தெந்த நடிகர்களை வைத்து படம் எடுப்பீர்கள் என்று கேள்வி இயக்குனர் சுகுமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுகுமார், "எனக்கு தளபதி விஜய் வைத்து படம் இயக்க ஆசை. அவரை தொடர்ந்து அஜித்தை வைத்து படம் இயக்கும் ஆசை உள்ளது. மூன்றாவதாக நடிகர் கார்த்தியை எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே அவரை வைத்தும் படம் இயக்க ஆசை" என கூறியுள்ளார்.

1 More update

Next Story