ஒரே நேரத்தில் நான் 5 சமோசாக்களை சாப்பிடுவேன்- தமன்னா சுவாரஸ்ய பேச்சு


ஒரே நேரத்தில் நான் 5 சமோசாக்களை சாப்பிடுவேன்- தமன்னா சுவாரஸ்ய பேச்சு
x

நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் தமன்னா பற்றிய சுவாரசிய செய்தி ஒன்று தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.

மும்பை,

பால் நிற மேனி நடிகை என்று வர்ணிக்கப்படுபவர் தமன்னா. இவர் தற்போது தமன்னா படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்தார். திருமணம் செய்து கொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த சூழ்நிலையில் காதல் முறிந்தது.

சமீப காலமாக விஜய் வர்மாவுடன் காதல், அவருடன் பிரிவு மற்றும் தமன்னாவை விட்டுவிட்டு விஜய் வர்மா வேறொரு பெண்ணுடன் சுற்றுகிறார் என தலைப்பு செய்திகள் தமன்னாவை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அவரைப் பற்றிய சுவாரசிய செய்தி ஒன்று தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது. நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் தமன்னா ஒரே நேரத்தில் 5 சமோசாக்களை சாப்பிடுவேன் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “எனக்கு சமோசா மிகவும் பிடிக்கும். அதுவும் டீ அல்லது காபியுடன் சமோசாவை சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் சிறப்பாக இருக்கும். ஒரே நேரத்தில் நான் 5 சமோசாக்களை சாப்பிடுவேன். உருளைக்கிழங்கில் செய்யப்பட்ட சாதாரண சமோசாக்கள் தான் ரொம்ப பிடிக்கும். பன்னீர் மற்றும் பிற பொருட்களால் செய்யப்பட்ட சமோசாக்களை நான் விரும்புவதில்லை. வீட்டில் சமோசா செய்வது இல்லை என்றாலும் திரையரங்குகளில் கிடைக்கும் ஏ1 சமோசாக்களை அடிக்கடி சாப்பிடுவேன். சமோசாக்கள் ஒரு உணவு மட்டுமல்ல அவை ஒரு பொழுதுபோக்கு.” இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story