’அதை முடித்துவிட்டு அடுத்த சிம்பொனியை எழுதுவேன்’ - இளையராஜா


I will finish it and write the next symphony - Ilaiyaraaja
x

இளையராஜா இந்த அறிவிப்பை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

சென்னை,

இசையமைப்பாளர் இளையராஜா தனது அடுத்த சிம்பொனி இசையில் சிம்பொனிக் டான்சர்ஸ் என்ற இசைக்கோர்வையை புதிய படைப்பாக எழுத உள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகை தாண்டி ஒட்டுமொத்த இந்தியா சினிமாவையும் தனது இசையால் ஈர்த்தவர் இளையராஜா. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து புதிய சாதனை படைத்தார்.

இந்த நிலையில் தீபாவளி திருநாளில் இளையராஜா புதிய அறிவிப்பை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், “எனது அடுத்த சிம்பொனியை, அம்மாவின் நினைவு தினத்தை முடித்து விட்டு வந்து துவங்கலாம் என இருக்கிறேன். இத்துடன் புதிய படைப்பாக ’சிம்பொனிக் டான்சர்ஸ்’ என்ற இசைக்கோர்வையை எழுதுவதாக இருக்கிறேன். இதை உங்களுக்கு தீபாவளி நற்செய்தியாக சொல்கிறேன். நன்றி வணக்கம்” என இளையராஜா கூறியுள்ளார்.

1 More update

Next Story