'அவரை வைத்து 10 படங்களாவது எடுப்பேன்' - பிரபல இயக்குனர்

அனில் ரவிபுடி, தற்போது வெங்கடேஷை வைத்து சங்கராந்திகி வஸ்துன்னம் என்ற படத்தை இயக்கி உள்ளார்.
'அவரை வைத்து 10 படங்களாவது எடுப்பேன்' - பிரபல இயக்குனர்
Published on

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அனில் ரவிபுடி. இவர் தற்போது வெங்கடேஷை வைத்து சங்கராந்திகி வஸ்துன்னம் என்ற படத்தை இயக்கி உள்ளார். கடந்த 14-ம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய அனில் ரவிபுடி, வெங்கடேஷை வைத்து குறைந்தது 10 படங்களாவது எடுப்பேன் என்று கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,

"நான் வெங்கடேஷ் சாரின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன். அவரை எனது படங்களின் மூலம் சிறந்த முறையில் சித்தரிக்க எப்போதும் முயற்சிப்பேன். குறைந்தது 10 படங்களையாவது அவரை வைத்து எடுப்பேன் "என்றார்.

இதனையடுத்து, அனில் ரவிபுடி , வெங்கடேஷை வைத்து என்ன மாதிரியான படம் பண்ணுவார் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதற்கிடையில், அனில் ரவிபுடி தனது அடுத்த படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com