ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரை மணப்பேன்- நடிகை ராஷிகன்னா

தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து அறிமுகமானவர் ராஷிகன்னா, அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரை மணப்பேன்- நடிகை ராஷிகன்னா
Published on

ராஷிகன்னா இணையதளத்தில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறும்போது, எனக்கு ஆண் நண்பர் இல்லை. இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. எனது வாழ்க்கை துணைவரை கண்டுபிடிக்கும்போது எல்லோருக்கும் சொல்வேன். எனக்கு வரப்போகிற கணவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்.

எனக்கு எல்லா கதாநாயகர்களையும் பிடிக்கும். தமிழில் விஜய் எனக்கு பிடித்த நடிகர், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு ஆகியோரை பிடிக்கும். அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து நடனம் ஆட விருப்பம் உள்ளது. கதாநாயகிகளில் நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா ஆகியோர் மிகவும் பிடித்தவர்கள். இப்போது தெலுங்கை விட அதிக தமிழ் படங்கள் கைவசம் வைத்து நடிக்கிறேன் என்றார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com