'அதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது' - இலியானா

சமூக வலைதளத்தில் என்னை பற்றி பரவும் தகவல்களை நான் கண்டுகொள்ள மாட்டேன் என்று இலியானா கூறினார்.
'அதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது' - இலியானா
Published on

சென்னை,

தமிழில் விஜய் ஜோடியாக 'நண்பன்' படத்தில் நடித்து பிரபலமானவர் இலியானா. 'கேடி' படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இலியானாவும், வெளிநாட்டை சேர்ந்த மைக்கேல் டோலனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் கணவர் குறித்து இலியானா அளித்துள்ள பேட்டியில், "என் கணவர் எனக்கு கிடைத்த வரம். என்னை நன்றாக புரிந்து கொள்ளும் மனிதர். கஷ்டத்தில் துணை இருக்கும் நண்பர். கணவராக அவர் கிடைத்தது எனது அதிர்ஷ்டம்.

எனது கணவர் கர்ப்ப காலத்தில் எனக்கு துணையாக இருந்தார். அந்த நேரத்தில் நான் தீவிரமான மன அழுத்த நெருக்கடிக்கு ஆளானேன். டெலிவரி ஆனபிறகு மைக்கேல் எங்களை கண்ணின் இமைபோல பாதுகாத்தார். அதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

சமூக வலைதளத்தில் என்னை பற்றி பரவும் தகவல்களை நான் கண்டுகொள்ள மாட்டேன். ஆனால் என் கணவர் குடும்பத்தை பற்றி கேவலமாக பேசினால் என்னால் தாங்க முடியாது. என் கணவர் அன்பானவர். நான் நடித்த படங்களில் எனது பாடல்களின் வரிகள் முழுவதையும் அவரால் பாடமுடியும். அவருக்கு என் மீது எவ்வளவு அன்பு உள்ளது என்பதற்கு இது சான்று'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com