மணிரத்னம் சாரை நான் என்றும் மறக்கவே மாட்டேன் -நடிகர் சிம்பு

என் மீது நம்பிக்கை வைத்த மணி சாரை என்றும் மறக்கவே மாட்டேன் என்று நடிகர் சிம்பு எமோஷனலாக பேசினார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் தற்போது கமல்ஹாசனை வைத்து தக் லைப் படத்தை இயக்கிள்ளார். இதில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சாய் ராம் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் தக் லைப் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் சிம்பு இயக்குனர் மணிரத்னம் குறித்து பேசியுள்ளார்.
அதாவது, "என்னை வைத்து படம் எடுக்க, எல்லோரும் பயந்த சமயத்தில், பயப்படாமல் தைரியமாக, 'இந்த பையனை நம்பலாம்' என என் மீது நம்பிக்கை வைத்து என்னை அழைத்த மணி சாரை என்றும் மறக்கவே மாட்டேன்" என்று நடிகர் சிம்பு எமோஷனலாக பேசினார்.






