"நான் ஒருபோதும் ஹீரோவாக நடிக்க மாட்டேன். இசைதான் என் உலகம்"- அனிருத்

இசையில் இன்னும் பல சாதனைகள் படைக்க விரும்புகிறேன் என்று அனிருத் தெரிவித்துள்ளார்.
"நான் ஒருபோதும் ஹீரோவாக நடிக்க மாட்டேன். இசைதான் என் உலகம்"- அனிருத்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழும் அனிருத் ரவிச்சந்தர், தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளிலும் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், தற்போது விஜய் நடிக்கும் ஜனநாயகன், நானி நடிக்கும் தி பாரடைஸ் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் அனிருத்திடம் நடிப்பது குறித்து திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இசையே என் முதல் மற்றும் முக்கிய ஆர்வம். கடந்த 15 ஆண்டுகளாக கிடைத்த வெற்றி போதாது. இன்னும் இசையில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறேன்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சமீபத்தில் கமல்- ரஜினி இணைந்து நடிக்க உள்ள புதிய (KHxRK) படத்தின் புரோமோ வீடியோவில் அனிருத் தோன்றியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதுகுறித்து விளக்கமளித்த அவர், பாடல் மற்றும் புரோமோஷன் வீடியோக்களில் மட்டுமே நான் நடிப்பேன் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com