'கோடி ரூபாய் கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன்' - ஜி.வி.பிரகாஷ் பேச்சு

‘ஸ்டார் டா’ செயலியின் அறிமுக விழா நேற்று சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது.
Image Credits : Instagram.Com\gvprakash
Image Credits : Instagram.Com\gvprakash
Published on

சென்னை,

சினிமாவில் வாய்ப்பு தேடும் கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் இடையே வாய்ப்பு குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்ள பிரத்யேகமாக 'ஸ்டார் டா' என்ற செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியின் அறிமுக விழா நேற்று சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. இந்த விழாவில் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், நிவேதிதா சதீஷ், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய நடிகர் ஜி.வி.பிரகாஷ், 'குளிர்பான விளம்பரங்கள், சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க எனக்கு பல கோடி ரூபாய் சம்பளத்துடன் அழைப்பு வந்தது. கோடி ரூபாய் கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன் என்று கூறி அதனை மறுத்துவிட்டேன். ஆனால் பேட்மின்டன் போன்ற விளையாட்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக பணியாற்றி இருக்கிறேன்.

அந்த வகையில் இந்த 'ஸ்டார் டா' தளத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறன். இதன் பிராண்ட் அம்பாசிடராக பொறுப்பேற்று இருப்பதற்கும் மகிழ்கிறேன். ஆரம்ப காலகட்டத்தில் சினிமாக்கு வர விரும்புவர்கள் எங்கு செல்வது, யாரை பார்ப்பது போன்ற கேள்விகள் அவர்களுக்குள் இருக்கும். அதற்கெல்லாம் இந்த செயலி பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன். இனி வரும் காலங்களில் என்னுடைய படங்களுக்கும் இந்த செயலி மூலமே நடிகர்களை தேர்வு செய்ய முயற்சிக்கிறேன்' என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com