இனிமேல் அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன்- நடிகை கீர்த்தி ஷெட்டி


இனிமேல் அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன்- நடிகை கீர்த்தி ஷெட்டி
x

நடிகை கீர்த்தி ஷெட்டி பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

கஸ்டடி, வா வாத்தியார், ஜினி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற படங்களில் நடித்திருப்பவர் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கு திரை உலகில் பல படங்களில் நடித்துள்ளார்.

கீர்த்தி ஷெட்டி கடந்த 2021-ம் ஆண்டு நானியுடன் ஷியாம் சிங்காராய் என்ற படத்தில் முத்தக்காட்சியில் நடித்திருந்தார். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “17 வயதில் முத்த காட்சியில் நடித்தது ரொம்ப அசவுகரியமாக இருந்தது. நடித்தபின் இது போன்ற காட்சிகளில் நடிக்க கூடாது என முடிவெடுத்தேன். இனிமேல் முத்தக்காட்சிகளிலோ புகைப்பிடிக்கும் காட்சிகளிலோ நடிக்க மாட்டேன் என்று கூறி உள்ளார்.

இதையடுத்து சமூக வலைதளத்தில் சிலர் வெளியிட்டுள்ள பதிவில், “கீர்த்தி ஷெட்டி முத்தக்காட்சியில் நடித்த போது அவருக்கு வயது வெறும் 17 தான். 37 வயதான நானி ஒரு மைனர் பெண்ணோடு எப்படி முத்தக்காட்சியில் நடிக்க சம்மதித்தார்” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

1 More update

Next Story