‘‘இனிமேல் நான் ஒயின் கூட குடிக்க மாட்டேன்’’ –ராகவா லாரன்ஸ்

இனி ஒயின் கூட குடிக்க மாட்டேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
‘‘இனிமேல் நான் ஒயின் கூட குடிக்க மாட்டேன்’’ –ராகவா லாரன்ஸ்
Published on

அன்னை தெரசாவின் 108வது பிறந்தநாள், சென்னையில் கொண்டாடப்பட்டது. விழாவில் நடிகரும், டைரக்டருமான ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டார். அவருக்கு, அன்னை தெரசா விருது வழங்கப்பட்டது. விழாவில் அவர் பேசியதாவது:

இந்த உலகில் உள்ள கடவுள்களில் முதல் கடவுளாக நான் கருதுவது, தாயைத்தான். அம்மா இல்லையென்றால் நான் இல்லை. ராயபுரத்தில் இருந்து கோடம்பாக்கம் வந்து நானும், அம்மா மற்றும் மூன்று சகோதரிகளும் வறுமையை எப்படியெல்லாம் அனுபவித்தோம்? என்பதை சொல்லி மாளாது. அதனால்தான் நான் இப்போது சம்பாதிப்பதை ஏழை மக்களுக்கு கொடுக்கிறேன்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனக்கு சிகரெட், மது என்று எந்த பழக்கமும் இல்லை. நடன கலைஞர் ஆனபின், நண்பர்களின் வற்புறுத்தலுக்காக, எப்போதாவது ஒருமுறை குடிப்பேன். அதையும் இப்போது நிறுத்தி விட்டேன். ரொம்ப டென்ஷன் ஆக இருந்தால், கொஞ்சம் ஒயின் அருந்துவேன். இப்போது, அன்னை தெரசா விருது பெற்றதன் மூலம் அந்த விருதுக்கு மரியாதை கொடுக்க, இனி ஒயின் கூட அருந்துவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறேன்.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com