நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வருவேன் - நடிகை சமந்தா

நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வருவேன் - நடிகை சமந்தா
Published on

நடிகை சமந்தாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதனால் புதிய படங்களில் அவர் நடிக்கவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் இந்தி வெப் தொடர் படப்பிடிப்பில் பங்கேற்றார். தெலுங்கில் குஷி படப்பிடிப்பிலும் இணைய இருக்கிறார். கடும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். இதனால் நோய் பாதிப்பில் இருந்து சமந்தா பூரணமாக குணமடைந்து விட்டதாக தகவல் பரவியது.

இதற்கு சமந்தா விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், "எனக்கு மயோசிடிஸ் நோய் இன்னும் முழுமையாக குணமாகவில்லை. தொடர்ந்து அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறேன். ஆனாலும் முன்பு இருந்த பாதிப்பில் இருந்து தேறி இருக்கிறேன். இந்த நோய் பாதிப்பில் இருந்து விரைவில் முழுமையாக மீண்டு வருவேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com