ஆரோக்கியத்தோடு மீண்டு வருவேன் - நடிகை சமந்தா

நடிகை சமந்தா ஒருவருடம் சினிமாவை விட்டு விலகி ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறார்
ஆரோக்கியத்தோடு மீண்டு வருவேன் - நடிகை சமந்தா
Published on

நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு சிகிச்சை பெற்றும் பூரணமாக குணமாகவில்லை. இதையடுத்து அமெரிக்கா சென்று சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார்.

இதற்காக ஏற்கனவே நடிக்க ஒப்பந்தம் செய்து இருந்த படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார். ஒருவருடம் சினிமாவை விட்டு விலகி ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறார்.

சமந்தா ஏற்கனவே விஜய்தேவரகொண்டா ஜோடியாக நடித்து முடித்த குஷி படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் சமந்தா கலந்து கொண்டு பேசும்போது, "நான் மீண்டு ஆரோக்கியத்தோடு திரும்பி வருவேன்'' என்றார்.

"படங்களில் ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காகவே கஷ்டபப்பட்டு நடிக்கிறோம். குஷி படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றும் கூறினார்.

விஜய்தேவரகொண்டா பேசும்போது, "சமந்தா முகத்தில் சிரிப்பை பார்க்க ஆசைப்படுகிறேன். இந்த படத்தில் நடிக்க மிகவும் கஷ்டப்பட்டார். அவருக்கு மயோசிடிஸ் பாதிப்பு தீவிரமாக இருந்தது. கடுமையான வேதனையை அவர் அனுபவித்தார். இன்னும் சமந்தா முழுமையாக குணமடையவில்லை. ஆனாலும் சிரித்த முகத்தோடு இருக்கிறார்'' என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com