விஜய்யை பார்த்தால் ஓங்கி குத்துவேன் - நடிகர் ரஞ்சித் ஆவேச பேச்சு


I will stab Vijay if I see him - Actor Ranjiths speech
x

மதுரை மாநாட்டில் பிரதமர் மோடி பற்றி விஜய் பேசியதற்கு நடிகர் ரஞ்சித் ஆவேசமாக பதிலளித்தார்

கோவை,

இந்து முன்னணி சார்பில் கோவை துடியலூர் சந்திப்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.கவை சேர்ந்த நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மதுரை மாநாட்டில் பிரதமர் மோடி பற்றி விஜய் பேசியதற்கு ஆவேசமாக பதிலளித்தார். அவர் கூறுகையில்,

''ஒரு வாக்காளனா, ஒரு குடிமகனா எனக்கு அப்பா யாரென்றால் அதுமோடிதான். அவர்தான் என்னை காப்பாற்றுகிறார். அமெரிக்காவே வியந்து பார்க்கும் ஒரே பிரதமர் மோடி, அவரை போய் கைநீட்டி சொடக்கு போட்டு பேச விஜய்க்கு அருகதை இல்லை. ஒங்கி குத்த வேண்டும்.

முதல்வரை அங்கிள் என்றும், பிரதமரை மிஸ்டர் என்றும் குறிப்பிடுகிறார். இதுதான் அரசியல் நாகரீகமா. நீயே இப்படி இருந்தால், உன்னை நம்பி இருக்கும் இளைஞர்கள் என்ன ஆவார்கள். எனக்கு வர கோவத்திற்குக்கு ஒங்கி குத்த வேண்டும் என தோன்றுகிறது. அதனை நாம் ஓங்கி ஓட்டாக குத்துவோம்'' என்றார்.

1 More update

Next Story