

சென்னை,
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக தனக்கென தனி இடம் பிடித்து இருப்பவர் நடிகர் அர்ஜுன். பல வருடங்களாக திரையுலகில் நிலைத்து நிற்கும் அர்ஜுன், நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர் என பல முகங்களைக் கொண்டவர். தமிழ், கன்னட படங்களில் தவிர்க்க முடியாத நடிகராக உள்ள அர்ஜுன் தனது ஆரம்ப காலங்களில் பட்ட கஷ்டத்தை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அர்ஜுன் கூறியிருப்பதாவது:
என் வாழ்வின் குறிப்பிட்ட காலத்தில் தொடர் தோல்விகளால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு, தன்னிடம் இருந்த சொத்துக்களைக் கூட விற்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன். பணம் அனைத்தும் நஷ்டமாகிவிட்ட நிலையில், எனக்கு நன்றாக வண்டி ஓட்டத் தெரியும். அதனால், நடிப்பை கைவிட்டுவிட்டு, பேசாமல் டிரைவிங் வேலைக்குச் சென்றுவிடலாமா என்று தீவிரமாக யோசித்தேன். அத்தனை தோல்விகளுக்குப் பிறகும், "நீ ஒரு நல்ல படம் கொடுத்தால் நாங்கள் பார்க்க தயாராக இருக்கிறோம்" என்று ரசிகர்கள் என் மீது வைத்த நம்பிக்கையே என்னை மீண்டும் சினிமாவில் நிலைநிறுத்தியது. இந்த நேரத்தில் தனக்கு ஆதரவளித்த பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.