"புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்!"- இளம் நடிகர் பூவையார்


புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்!- இளம் நடிகர் பூவையார்
x

இயக்குனர் ஜெயவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள "ராம் அப்துல்லா ஆண்டனி" என்ற படத்தில் பூவையார் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சென்னை,

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றவர் பூவையார். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் "பிகில்" படத்தில் 'வெறித்தனம்' பாடலில் நடனமாடி அறிமுகமானார். அதனை தொடர்ந்து "மாஸ்டர், மகாராஜா, அந்தகன்" போன்ற படங்களிலும் நடித்திருந்தார். பூவையார், குக் வித் கோமாளி சீசன் 6-ல் கோமாளியாகவும் பங்கேற்றுள்ளார்.

இவர் தற்போது இயக்குனர் ஜெயவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள "ராம் அப்துல்லா ஆண்டனி" என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அன்னை வேலாங்கன்னி ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் அஜய் அர்னால்ட் , அர்ஜுன், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா என பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். இப்படம் தவறான பாதையில் செல்லும் பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் பூவையார் பேசும்போது, "புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்!, நான் ஹீரோவாக நடித்துள்ள "ராம் அப்துல்லா ஆண்டனி" படம் புகையிலைக்கு எதிரான கருத்துகளை பேசியுள்ளது. வருங்காலத்தில் நான் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்." என்று பேசினார்.

1 More update

Next Story