புகழ்ச்சியை தலையில் ஏற்றிட மாட்டேன்- நடிகை கல்யாணி பிரியதர்ஷன்


புகழ்ச்சியை தலையில் ஏற்றிட மாட்டேன்- நடிகை கல்யாணி பிரியதர்ஷன்
x

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ரவி மோகனுடன் ‘ஜீனி’ படத்திலும், கார்த்தியுடன் ‘மார்ஷல்’ படத்திலும் நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ''ஹலோ'' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, 2019ம் ஆண்டு தமிழில் ஹீரோ மூலம் அறிமுகமானார். அதில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

துல்கர் சல்மான் தயாரிப்பில் டொமினிக் அருண் இயக்கத்தில் ‘லோகா சாப்டர்-1 : சந்திரா’ என்ற மலையாள படம் கடந்த மாதம் வெளியானது. இதில் கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரத்தம் குடிக்கும் மோகினியாக அவரது கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. இதுவரை ரூ.300 கோடி வசூலை குவித்து ‘லோகா’ படம் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. தென்னிந்திய சினிமா வரலாற்றில் நடிகையை மையமாக கொண்ட எந்த படமும் ரூ.100 கோடியை கடந்தது கிடையாது.

அந்த வரலாற்றை மாற்றிய கல்யாணி பிரியதர்ஷன் கூறும்போது, “இந்திய அளவில் கவனம் ஈர்த்தது மகிழ்ச்சி. எது எப்படி இருந்தாலும், புகழ்ச்சியை நான் தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். தொடர்ந்து என் கடின உழைப்பை சினிமாவுக்கு தருவேன்” என்றார். கல்யாணி பிரியதர்ஷன் தற்போது ரவி மோகனுடன் ‘ஜீனி' படத்திலும், கார்த்தியுடன் மார்ஷல் படத்திலும் நடித்து வருகிறார்.

1 More update

Next Story