‘வெற்றியை தலைக்கு ஏற்றிக்கொண்டு ஆடமாட்டேன்’ - நடிகர் சூரி

அடுத்த வேலைக்காக எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பேன் என சூரி தெரிவித்துள்ளார்.
‘வெற்றியை தலைக்கு ஏற்றிக்கொண்டு ஆடமாட்டேன்’ - நடிகர் சூரி
Published on

சென்னை,

இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி, நடிகர் சூரி, நடிகை அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், சென்னை தரமணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படக் குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் சூரியின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் ‘மண்டாடி’ படத்தின் வெற்றிக்கு ‘ஏழு கடல் ஏழு மலை’ படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி, “நீங்கள் தந்த வெற்றியை தலைக்கு ஏற்றிக்கொண்டு என் இஷ்டப்படி ஆட மாட்டேன். வெற்றியை மரியாதையோடு ஏற்றுக்கொண்டு அடுத்த வேலைக்காக எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பேன்” என்று தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com