அவர் இல்லாமல் படம் பண்ண மாட்டேன்! - லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ், இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கூலி. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'கூலி' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
கூலி படத்தினை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கதாநாயகனாக நடிக்க தொடங்கி உள்ளார். அந்த வகையில், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ், "நான் அனிருத் இல்லாமல் படம் பண்ண மாட்டேன்" என கூறி இருக்கிறார். ஒருவேளை எங்கள் இரண்டு பேரில் ஒருவர் சினிமாவில் இருந்து விலகினால் அதன் பிறகு பார்க்கலாம் என்றார். அதனால் லோகேஷின் அடுத்தடுத்த படங்களுக்கும் அவர் தான் இசைமைப்பாளர் என்பது உறுதியாகி உள்ளது.






