துல்கர் சல்மான் இல்லையென்றால் 'காந்தா' படத்தை தயாரித்திருக்கவே மாட்டேன் - ராணா டகுபதி


துல்கர் சல்மான் இல்லையென்றால் காந்தா படத்தை தயாரித்திருக்கவே மாட்டேன் - ராணா டகுபதி
x

துல்கர் சல்மானின் 'காந்தா' திரைப்படத்தை செல்வமணி செல்வராஜு இயக்கி வருகிறார்.

சென்னை,

மலையாள நடிகர் துல்கர் சல்மான், செல்வமணி செல்வராஜு இயக்கத்தில் நடித்து வரும் படம் ''காந்தா''. இயக்குனர் செல்வமணி செல்வராஜு நெட்பிளிக்ஸில் வெளியான 'தி ஹன்ட் பார் வீரப்பன்' என்ற வெப் தொடரை இயக்கியவர் என்று குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தினை ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா, துல்கர் சல்மானின் வேபேரர் பிலிம்ஸ் மற்றும் சுரேஷ் புரொடக்சன்ஸ் இணைந்து ''காந்தா'' படத்தைத் தயாரித்து வருகின்றன. ராணா டகுபதி இந்த படத்தை தயாரிப்பதோடு மட்டுமில்லாமல், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கும் இந்த படம் ஆகஸ்ட் 1-ம் தேதி திரைக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகரும் தயாரிப்பாளருமான ராணா டகுபதி பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு காந்தா படம் குறித்து பேசியுள்ளார். அதாவது, ''காந்தா படத்திற்கு ஒரு நடிகரை தேடிய போது என்னால் துல்கர் சல்மான் தவிர வேறு யாரையும் நினைத்துகூட பார்க்கமுடியவில்லை. அவர் தான் இந்த படத்திற்கு சரியாக இருப்பார். துல்கர் சல்மான் இல்லையென்றால் நான் இந்த படத்தை தயாரித்திருக்கவே மாட்டேன். ஏனென்றால் துல்கர் சல்மான் ஒரு அழகியலான சினிமாவை மக்களுக்கு கொண்டு சேர்க்கின்றனர்'', என்றார்.

1 More update

Next Story