‘ஐஸ் ஏஜ்: பாய்லிங் பாயிண்ட்’ டீசர் வெளியீடு; மீண்டும் திரும்பும் மேன்னி, சிட், டியாகோ!

இப்படம், 2027 பிப்ரவரி 5-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
Ice Age: Boiling Point
Published on

உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த ஐஸ் ஏஜ் அனிமேஷன் திரைப்படத் தொடர், புதிய பாகத்துடன் மீண்டும் திரையரங்குகளுக்கு வர உள்ளது. ‘ஐஸ் ஏஜ்: பாய்லிங் பாயிண்ட்’ (Ice Age: Boiling Point) என்ற பெயரில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாவா மற்றும் டைனோசர் உலகில் புதிய சாகசம்

இந்த படத்தில் மேன்னி, சிட், டியாகோ, எல்லி, ஸ்க்ராட் உள்ளிட்ட ரசிகர்களின் விருப்பமான கதாபாத்திரங்கள் மீண்டும் இடம் பெறுகின்றன. இம்முறை அவர்கள் இதுவரை காணப்படாத 'லாஸ்ட் வேர்ல்ட்' பகுதிகளுக்குச் சென்று, எரிமலை வெடிப்புகள், லாவா ஆறுகள் மற்றும் டைனோசர்களால் நிரம்பிய ஆபத்தான சூழல்களை எதிர்கொள்ளும் சாகசப் பயணத்தில் ஈடுபடுகின்றனர்.

2027-ல் திரையரங்குகளில் வெளியீடு

20த் சென்ட்சுரி அனிமேஷன் தயாரிப்பு உருவாகும் இப்படம், 2027 பிப்ரவரி 5-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இது ஐஸ் ஏஜ் தொடரின் ஆறாவது முக்கிய பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com