"3 பிஎச்கே" படத்தின் "இடி மழை" பாடல் வெளியானது

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள '3 பிஎச்கே' படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது.
"3 பிஎச்கே" படத்தின் "இடி மழை" பாடல் வெளியானது
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த், 'மிஸ் யூ' படத்தை தொடர்ந்து '3 பிஎச்கே' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இது சித்தார்த்தின் 40-வது படமாகும். இந்த படத்தை '8 தோட்டாக்கள், குருதி ஆட்டம்' போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கி உள்ளார்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படம் 3 பிஎச்கே வீடு வாங்க ஆசைப்படும் குடும்பத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், '3 பிஎச்கே' திரைப்படத்தின் 2வது பாடலான 'இடி மழை' பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடலை பால் டப்பா மற்றும் அம்ரித் ராம்நாத் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை பால் டப்பா எழுதியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com