“இட்லி கடை” படத்தின் 3வது பாடல் நாளை வெளியீடு

தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது.
“இட்லி கடை” படத்தின் 3வது பாடல் நாளை வெளியீடு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக இட்லி கடை உருவாகியுள்ளது. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்காக படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 14-ம் தேதி சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது. இட்லி கடை படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இட்லி கடை படத்தின் 3வது பாடல் என் பாட்டன் சாமி நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com