“இட்லி கடை” படத்தில் பார்த்திபன் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு

தனுஷ், நித்யா மேனன் நடித்த ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாகிறது.
“இட்லி கடை” படத்தில் பார்த்திபன் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு
Published on
Updated on

சென்னை,

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்தில் 4-வது படமாக இட்லி கடை உருவாகியுள்ளது. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இட்லி கடை திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகம இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் 'என்ன சுகம்' முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடலை தனுஷ் எழுதி ஸ்வேதா மோகனுடன் பாடியுள்ளார். இட்லி கடை படத்தின் எஞ்சாமி தந்தானே பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். இப்பாடலில், தெருக்குரல் அறிவு ராப் பாடியுள்ளார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 14-ம் தேதி சென்னை நேரு மைதானத்தில் நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அன்றே இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இட்லி கடை படத்தில் பார்த்திபன் , அறிவு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com