‘இட்லி கடை’ படம்: புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!


‘இட்லி கடை’ படம்: புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
x
தினத்தந்தி 29 Sept 2025 11:17 AM IST (Updated: 30 Sept 2025 1:00 PM IST)
t-max-icont-min-icon

தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. ‘யு’ தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கான, புரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ‘இட்லி கடை’ படக்குழு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story