'இது போன்ற படம் இப்போது வெளியானால் தியேட்டர்கள் எரிக்கப்படும்' - ராஜீவ் மேனன்

இந்தியாவில் சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து விட்டதாக ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா நடிப்பில், மணிரத்னம் இயக்கிய 'பம்பாய்' திரைப்படம் கடந்த 1995-ம் ஆண்டு வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மகிப்பெரிய ஹிட்டானது. இந்த படத்தில் ராஜீவ் மேனன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார்.
பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு நாடு முழுவதும் நடந்த வன்முறை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் அன்றைய காலகட்டத்தில் பெரும் சர்ச்சைகளை எதிர்கொண்டது.
இந்நிலையில், பம்பாய் போன்ற ஒரு படம் தற்போது வெளியானால் தியேட்டர்கள் எரிக்கப்படும் என்று ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவின் சூழ்நிலை மிகவும் நிலையற்றதாக உள்ளதாகவும், மதம் மிகப்பெரிய பிரச்சினையாகிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், பம்பாய் படம் வெளியாகி இந்த 30 ஆண்டுகளில், இந்தியாவில் சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து விட்டதாக குறிப்பிட்ட அவர், பம்பாய் போன்ற ஒரு படம் தற்போது வெளியானால் தியேட்டர்கள் எரிக்கப்படக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.






