''விஜய்யை எல்லா ஹீரோக்களும் பின்பற்றினால்...எங்களுக்கு ரொம்ப நல்லது'' - ''வாரிசு'' பட தயாரிப்பாளர்


IF All heroes follow Vijay - Varisu producer
x
தினத்தந்தி 6 July 2025 11:35 AM IST (Updated: 6 July 2025 12:16 PM IST)
t-max-icont-min-icon

விஜய் நடித்துள்ள ''ஜன நாயகன்'' படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

விஜய்யின் கால்ஷீட் கொள்கையை மற்ற ஹீரோக்களும் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்று ''வாரிசு'' பட தயாரிப்பாளர் தில் ராஜு கூறி இருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தில் ராஜு பேசுகையில்,

"விஜய் சார் கால்ஷீட்டை சரியாக கொடுப்பார். அவரது கொள்கை 6 மாதங்கள், ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள். இதனால் படம் 6 மாதங்களில் முடிக்கப்படும். ஒரு தயாரிப்பாளருக்கு இதை விட சந்தோஷம் எதுவும் இருக்காது.

விஜய்யின் இந்த ரூல்ஸை மற்ற நடிகர்களும் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும். இது தயாரிப்பாளர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக இருக்கும். தெலுங்கு சினிமாவில் இது சீர் குழைந்திருக்கிறது'' என்றார்.

விஜய் தற்போது தனது கடைசி படமான ''ஜன நாயகன்'' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story