'எனக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தால்...'- பிரபல தென் கொரிய நடிகர்

பாலிவுட்டில் நடிக்க விரும்புவதாக பிரபல தென் கொரிய நடிகர் பார்க் சியோ ஜூன் கூறியுள்ளார்.
'If I get a chance in Bollywood...'- famous South Korean actor
Published on

மும்பை,

பிரபல தென் கொரிய நடிகர் பார்க் சியோ ஜூன். இவர் கில் மீ, ஹீல் மீ, ஷீ வாஸ் பிரிட்டி, ஹ்வாரங்: தி பொயட் வாரியர் யூத், பைட் பார் மை வே, வாட்ஸ் ராங் வித் செக்ரட்டரி கிம், இடாவோன் கிளாஸ் மற்றும் கியோங்சியோங் கிரியேச்சர் ஆகிய தொலைக்காட்சித் தொடரில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் இவர் நடித்த கியோங்சியோங் கிரியேச்சரின் இரண்டாவது சீசன் வெளியானது. இதில்,  ஹான் சோ-ஹீ, கிளாடியா கிம், வை ஹா-ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இன்னும் நீண்ட தூரம் செல்ல விரும்புவதாக பார்க் சியோ-ஜூன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'நான் பாலிவுட்டை மிகவும் விரும்புகிறேன். என்னை அங்கு அழைத்து வாய்ப்பு கொடுங்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நான் மேலும் உயரம் செல்வேன். ஒரு நடிகனாக நான் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நான் தொடர்ந்து முன்னேறி வரும் நடிகராக இருக்க விரும்புகிறேன்,' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com