“நான் சிக்னல் கொடுத்தால்..” அமிதாப் பச்சன் ஆவேச பதிவு

அமிதாப் பச்சன் நேற்று கடும் கோபத்துடன் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
“நான் சிக்னல் கொடுத்தால்..” அமிதாப் பச்சன் ஆவேச பதிவு
Published on: 

மும்பை,

எனக்கு சமூக வலைத்தளத்தில் 5 கோடி பின்தொடர்பவர்கள் உள்ளனர். திருப்பி அடிக்க அவர்களில் 10 சதவீதம்பேர் போதும். அவர்கள் என் சிக்னலுக்காக' காத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகர் அமிதாப் பச்சன்

இந்திய சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் அமிதாப் பச்சன், பாலிவுட்டின் “ஷஹென்ஷா" என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். 1969-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான அவர், "ஷோலே, டான், தீவார், குலி, பா, பிகூ" உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். நடிகர் மட்டுமல்லாமல், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்து இந்திய திரையுலகில் தனக்கென அழியாத முத்திரையை பதித்துள்ளார்.

“உங்கள் யானைகளை கொண்டு வாருங்கள்”

இந்த நிலையில், இந்தி திரையுலக சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் கடந்த மாதம் 29-ந் தேதி சமூக வலைத்தளத்தில் கிருஷ்ணர் பிரார்த்தனை ஒன்றை பதிவு செய்தார். “உங்கள் யானைகளை கொண்டு வாருங்கள். நாங்களும் கொண்டு வருகிறோம்” என்று அதில் கூறியிருந்தார். அதற்கு ஒரு ஊடகம், "யானைகளையும், குதிரைகளையும் கொண்டு வருமாறு எதிரிகளுக்கு அமிதாப் பச்சன் சவால் விடுக்கிறார்" என்று எழுதி இருந்தது.

அமிதாப் பச்சன் கடும் கோபம்

அதைக்கண்டு அமிதாப் பச்சன் நேற்று கடும் கோபத்துடன் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- யானைகள் கொண்டுவரச் சொல்வது கிருஷ்ணர் பிரார்த்தனையில் ஒரு வடிவம். ஆனால் தனது சொந்த விளம்பரத்துக்காக அந்த ஊடகம் எனது வார்த்தைகளை திட்டமிட்டு திரித்து வெளியிட்டுள்ளது. இது, கிருஷ்ணர் பிரார்த்தனைக்கு இழைக்கப்பட்ட அநீதி.

ஊடக நிறுவனம் தனது காதை திறந்து கேட்டுக்கொள்ளட்டும். எனக்கு சமூக வலைத்தளத்தில் 5 கோடி பின்தொடர்பவர்கள் உள்ளனர். திருப்பி அடிக்க அவர்களில் 10 சதவீதம்பேர் போதும். அவர்கள் என் சிக்னலுக்காக' காத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X