

மும்பை,
“எனது உடல் தோற்றம் குறித்து வரும் விமர்சனங்கள் வேதனையை ஏற்படுத்தினாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்று நிகழ்ச்சி ஒன்றில் கத்ரீனா கைப் பேசியுள்ளார்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்பவர் கத்ரீனா கைப். இவரது சமீபத்திய தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அவரது உடல் எடை அதிகரித்துவிட்டதாக சிலர் கருத்து தெரிவித்தனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து, உருவக்கேலிக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். முன்னணி நடிகர்களும் இத்தகைய விமர்சனங்களுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கத்ரீனா கைப், தனது உடல் தோற்றம் குறித்த விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது உடல் தோற்றம் குறித்து வரும் விமர்சனங்கள் வேதனையை ஏற்படுத்தினாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இதுபோன்ற விமர்சனங்கள் ஒருவரின் தன்னம்பிக்கையைச் சிதைத்து, அவர்களைத் தனிமைப்படுத்திவிடும். ஆனால், அப்படி முடங்கிப்போயிருக்க நான் விரும்பவில்லை.
விமர்சனங்களுக்குப் பயந்திருந்தால், நான் சினிமாவில் இருந்து எப்போதோ காணாமல் போயிருப்பேன். சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்கள் நமது சுயமதிப்பைப் பாதிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இந்த உலகம் சில நேரங்களில் நம்மைப் பாராட்டும்; சில நேரங்களில் விமர்சித்துத் தாக்கும். இவை அனைத்தையும் கடந்து செல்லும் மனநிலைதான் இப்போது அனைவருக்கும் முக்கியம்” என்றார்.
உடல் தோற்றத்தை மையமாகக் கொண்டு ஒருவரை விமர்சிப்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், கத்ரீனா கைப்பின் இந்தக் கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.