நான் பேசினால் காப்பாற்ற யாரும் வர மாட்டீர்கள் - 'ஜனநாயகன்' பட இயக்குனர் வினோத்

`மை லார்ட்' பட புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் எச்.வினோத் பேசியது கவனம் பெற்றுள்ளது.
நான் பேசினால் காப்பாற்ற யாரும் வர மாட்டீர்கள் - 'ஜனநாயகன்' பட இயக்குனர் வினோத்
Published on

சென்னை,

சசிக்குமார், சைத்ரா நடிப்பில் ராஜூமுருகன் இயக்கி கடந்த 13-ம் தேதி வெளியான படம் `மை லார்ட்'. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக சமுத்திரக்கனி, பாண்டிராஜ், ராஜூமுருகன், எச் வினோத் ஆகியோர் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினர்.

அதில் எச் வினோத் பேசிய போது " `மை லார்ட்' படத்தில் பல ஆயிரம் வருடங்களாக இருக்கும் அரசியல் இருக்கிறது. அவற்றை எல்லாம் நான் பேசுவதில்லை. இந்தப் படத்தில் முத்துசிற்பி கதாபாத்திரம் பாதிக்கப்படும் போது தமிழ்க்குத்து பத்திரிகையாளர் வந்து காப்பாற்றுவார். அதுவே நான் பேசினால் காப்பாற்ற யாரும் வர மாட்டீர்கள்." எனக் கூறினார்.

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் தணிக்கை சான்று பிரச்சினையால் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது. இத்தகைய சூழலில் ஹெச் வினோத் இப்படி பேசியிருப்பது சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com