என்னுடைய முதல் காதல் பற்றி சொன்னால் தமிழ்நாடே அதிரும் - நடிகை வனிதா விஜயகுமார்

முதல் காதல் எனக்கும் சம்பந்தப்பட்ட அந்த நபர் என 2 பேருக்குமே மிக நன்றாக தெரியும் என நடிகை வனிதா விஜயகுமார் பேசியிருக்கிறார்.
என்னுடைய முதல் காதல் பற்றி சொன்னால் தமிழ்நாடே அதிரும் - நடிகை வனிதா விஜயகுமார்
Published on

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான ‘சந்திரலேகா’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். இத்திரைப்படத்தில் விஜய் நாயகனாக நடித்திருந்தார். ராஜ்கிரணின் மாணிக்கம், மலையாளத்தில் ஹிட்லர் பிரதர்ஸ், தெலுங்கில் தேவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

நடன இயக்குனர் ராபர்ட் இயக்கிய ‘எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வனிதா விஜயகுமார் நடித்திருந்தார். இவர் பவர் ஸ்டாருடன் இணைந்து ‘பிக்கப் ட்ராப்’ படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சியில் இடம்பெற்று தன்னுடைய திறமையையும் நிரூபித்தார் வனிதா விஜயகுமார்.வனிதா விஜயகுமார் ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ படத்தை இயக்கி தயாரித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ்’ 3வது சீசனிலும் பங்கேற்றார்.

இந்த நிலையில் யூடியூப் தளம் ஒன்றில் தனது முதல் காதல் குறித்து பேசிய வனிதா, “என்னுடைய முதல் காதல் பற்றி பேச வேண்டும் என்றால், என்னால் இப்போது எதையும் வெளிப்படையாக பேச முடியாது. என்னை முதன் முதலாக காதலித்தது யார்? அல்லது நான் யாரை முதன் முதலில் காதலித்தேன் என்பதை என்னால் வெளியே சொல்லவே முடியாது. அப்படி நான் அந்த உண்மையை சொன்னால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர்ந்துவிடும். அதனால் அதை சொல்லாமல் நான் மௌனமாக இருப்பதே நல்லது. எனது முதல் காதலை சொல்லாமலே பல வருடங்களை நான் கடந்து வந்துட்டேன். என்னுடைய நினைவுகள் எப்போதும் எனக்குள் மட்டும் தான் இருக்கும். முதல் காதல் ரகசியம் எனக்கும் சம்பந்தப்பட்ட அந்த நபர் என 2 பேருக்குமே மிக நன்றாக தெரியும்” என பேசியிருக்கிறார்.

வனிதாவின் இந்த பேச்சு வலைதளங்களில் விவாதங்களை தூண்டியிருக்கிறது. அந்த முதல் காதலர் யார் என்கிற கேள்வியையும், இவராக இருக்குமோ, அவராக இருக்குமோ என்கிற யூகங்களை வலைதளவாசிகள் எழுப்பி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com