உறவினர்கள் இருந்தால் அதிர்ஷ்டம் “சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம்”- அதிதிராவ்

உறவினர்கள் இருந்தால் அதிர்ஷ்டம், சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் என அதிதிராவ் கூறினார்.
உறவினர்கள் இருந்தால் அதிர்ஷ்டம் “சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம்”- அதிதிராவ்
Published on


மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக காற்று வெளியிடை படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிர்களுக்கு பரிச்சயமானவர் அதிதிராவ். தற்போது அரவிந்தசாமி, சிம்பு ஆகிய இருவருடன் செக்க சிவந்த வானம் படத்தில் நடிக்கிறார். இந்தியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். அதிதிராவ் அளித்த பேட்டி வருமாறு:-

நான் சிறுவயதிலேயே மணிரத்னம் ரசிகை. அவருடைய பம்பாய் படத்தை பார்த்து மனிஷா கொய்ராலா மாதிரி நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதற்காகவே நடனம் கற்றேன். அதன் பிறகு எனக்கு பிடித்த மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் கீழே குதிக்க சொன்னாலும் யோசிக்காமல் குதிப்பேன்.

நடிகர் நடிகைகளிடம் நுணுக்கமாக வேலை வாங்குவதில் மணிரத்னம் திறமையானவர். வித்தியாசமான கதைகள், புதிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. சினிமா குடும்ப பின்னணியில் உள்ளவர்கள் இருந்தால் அவர்களின் ஆதரவால் எளிதாக வளர முடியும். அது இல்லாதவர்கள் முன்னேறுவது கஷ்டம். அவர்கள் அதிகமாக உழைக்க வேண்டும்.

என்னை தூக்கி விட உறவினர்கள் யாரும் சினிமாவில் இல்லை. கஷ்டப்பட்டுத்தான் வாய்ப்புகள் தேடினேன். இன்னும் எனக்கு திருப்புமுனையான கதாபாத்திரம் அமையவில்லை. இவ்வாறு அதிதிராவ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com