''மணி ஹீஸ்ட்'' வெப் தொடரின் தமிழ் ரீமேக்கில் நடிக்க விரும்பும் நடிகை


If Money Heist is remade in Tamil...I would like to play this role - Priyamani
x
தினத்தந்தி 9 July 2025 11:13 AM IST (Updated: 9 July 2025 12:11 PM IST)
t-max-icont-min-icon

மணி ஹீஸ்ட் வெப் தொடரின் தமிழ் ரீமேக்கில் நடிக்க விரும்புவதாக பிரியாமணி கூறியுள்ளார்.

சென்னை,

நடிகை பிரியாமணி, தான் நடிக்க ஆர்வமாக உள்ள கனவு கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ''தி குட் வைப்'' வெப் தொடரில் நடித்த தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி, தான் நடிக்க ஆர்வமாக உள்ள கனவு கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். அது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்திய ''மணி ஹீஸ்ட்'' வெப் தொடரின் தமிழ் ரீமேக் ஆகும்.

சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், மணி ஹீஸ்ட் வெப் தொடரின் தமிழ் ரீமேக்கில் நடிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.

ஜவானில் தனது கதாபாத்திரம் ஏற்கனவே மணி ஹீஸ்டின் ரீமேக்போல இருந்ததாக சிலர் கிண்டல் செய்ததாகவும், தமிழ் ரீமேக் உருவாகி அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் டோக்கியோ அல்லது லிஸ்பன் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது, பிரியாமணி ''தி பேமிலி மேன் 3'' , ''ஜன நாயகன்'' உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

1 More update

Next Story