"கேஸ்டிங் சரியா இருந்தா பாதி கிணற தாண்டின மாதிரி"- ஹேப்பி ராஜ் பட மேடையில் நடிகர் கவின்

மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் ‘ஹேப்பி ராஜ்’ படத்தில் நடித்துள்ளார்.
"கேஸ்டிங் சரியா இருந்தா பாதி கிணற தாண்டின மாதிரி"- ஹேப்பி ராஜ் பட மேடையில் நடிகர் கவின்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, ‘ஹேப்பி ராஜ்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்கியுள்ளார். இதில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கவுரி பிரியாவும் முக்கிய கதாபாத்திரங்களில் அப்பாஸ் மற்றும் ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற 27ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் கவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், “லவ் டுடே படத்தின் டிரெய்லரை பார்த்தபோது என்ன மாதிரியான ஒரு வைப் கிடைத்ததோ, அதே மாதிரியான உணர்வு ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் டீசரை பார்த்தபோதும் கிடைத்தது. அதன் பிறகுதான் இந்த படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அவர்களின் உதவி இயக்குனர் என்று தெரிந்தது” என்றார்.

மேலும், நெல்சன் திலீப்குமார் அடிக்கடி கூறும் ஒரு கருத்தையும் கவின் மேற்கோள் காட்டினார். “படத்தின் கேஸ்டிங் சரியாக இருந்தால், அது பாதி கிணறு தாண்டிய மாதிரி” என்று நெல்சன் சொல்வார். ஆனால் ‘ஹேப்பி ராஜ்’ படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மூலமாக இந்த படம் “முக்கால் கிணறு தாண்டிவிட்டது” என்று கவின் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com