'மஞ்சுமல் பாய்ஸ் படக்குழு கமலை பார்த்த மாதிரி இளையராஜாவையும் பார்த்திருந்தால்...' - விஜய் ஆண்டனி

மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு விஜய் ஆண்டனி பதிலளித்தார்.
'If the Manjumal Boys film crew had seen Kamal instead of Ilayaraja...' - Vijay Antony
Published on

சென்னை,

ரோமியோ திரைப்பட வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்". விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஆண்டனி, சத்யராஜ் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது விஜய் ஆண்டனி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு,

"படம் வெற்றி பெற்றவுடன் கமல் சாரை பார்த்ததுபோல் இளையராஜா சாரையும் பார்த்திருந்தால் இந்தளவிற்கு போயிருக்காது என நினைக்கிறேன். உண்மையாக என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. ராஜா சார், முன்னதாக சொந்தமாக ஆடியோ லேபிள் வைத்திருந்தார். எகோ கம்பெனியின் உரிமையாளரும் அவர் தான் என நினைக்கிறேன். அவர் நண்பரின் பெயரில் நடத்திட்டு வந்தார். உரிமம் உள்ள பாடல்களுக்கு மட்டும் தான் அவர் ராயல்டி கேட்கிறார் என நினைக்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com