“பரதா” படத்தின் விமர்சனம் நன்றாக இருந்தால் திரையரங்குக்கு வாருங்கள் - அனுபமா

அனுபமா நடித்துள்ள ‘பரதா’ படம் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாகிறது.
“பரதா” படத்தின் விமர்சனம் நன்றாக இருந்தால் திரையரங்குக்கு வாருங்கள் - அனுபமா
Published on

'பிரேமம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அப்படத்தின் இமாலய வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார். தமிழில் தனுஷ் உடன் 'கொடி' படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில், 'கார்த்திகேயா - 2' , '18 பேஜஸ்', 'டில்லு ஸ்கொயர்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றதால் அனுபமா தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் படத்தின் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் வரவேற்பை பெற்றார்.

அனுபமா பரமேஸ்வரன் பரதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் பிரீ ரிலீஸ் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி அண்மையில் நடைப்பெற்றது. இப்படத்தை பிரவீன் கண்ட்ரேகுலா இயக்கியுள்ளார். பிரவீன் இதற்கு முன் சினிமா பண்டி மற்றும் சுபம் திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது. பரதா திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் 22ம் தேதி வெளியாக இருக்கிறது.

பரதா கட்டாயமாக அணியும் வழக்கத்தை வைத்திருக்கும் கிராமத்தில் இருந்து அனுபமா வருகிறார், அவர் ஒரு பயணத்தில் மற்ற பெண்களை மற்றும் உலகை புரிந்துக் கொள்ளும் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அனுபமா எங்களிடம் விமர்சகர்களுக்கு நல்ல விமர்சனம் எழுத சொல்லி கொடுக்க பணம் இல்லை. இப்படத்தின் மீது வெளிவரும் விமர்சனங்கள் அனைத்தும் மக்களின் இயற்கை வெளிபாடாக தான் இருக்கும். விமர்சங்கள் நன்றாக இருந்தால் படத்தை திரையரங்கில் காண வாருங்கள் இல்லையெனில் இப்படத்தை நீங்கள் பார்க்க வேண்டாம் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com