தைரியம் இருந்தால் டெஸ்டுக்கு வாங்க கணவரே.. மாதம்பட்டி ரங்கராஜுக்கு சவால் விட்ட ஜாய் கிரிசில்டா


தைரியம் இருந்தால் டெஸ்டுக்கு வாங்க கணவரே.. மாதம்பட்டி ரங்கராஜுக்கு  சவால் விட்ட ஜாய் கிரிசில்டா
x
தினத்தந்தி 20 Nov 2025 11:34 AM IST (Updated: 1 Dec 2025 8:22 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.ஏ. டெஸ்ட் தொடர்பாக ஸ்டேட்மெண்ட் விட்டு 15 நாள் ஆச்சு, தைரியம் இருந்தால் டெஸ்டுக்கு வாங்க என்று ஜாய் கிரிசில்டா சவால் விடுத்துள்ளார்.

சென்னை,

தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்தார். மாநில மகளிர் ஆணையத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதற்கிடையில், ‘மகளிர் ஆணையம் நடத்திய சமீபத்திய விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் என்னைக் காதலித்துத் திருமணம் செய்ததையும், குழந்தை தனக்குத்தான் சொந்தம் என்பதையும் ஒப்புக்கொண்டார்' என்று ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார். இதனை மாதம்பட்டி ரங்கராஜ் மறுத்தார். ‘நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஒருபோதும் டி.என்.ஏ. பரிசோதனையை மறுத்ததில்லை. மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன்', என்றும் கூறியிருந்தார்.

இந்தநிலையில் ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (இன்ஸ்டா ஸ்டோரி) வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், ‘`என் கணவர் மாதம்பட்டி ரங்கராஜை யாராவது பார்த்தால் தயவுசெய்து டி.என்.ஏ. டெஸ்டுக்கு வர சொல்லுங்க. டி.என்.ஏ. டெஸ்ட் தொடர்பாக ஸ்டேட்மெண்ட் விட்டு 15 நாள் ஆச்சு. இப்போ எங்க தலைமறைவா இருக்காரு. தைரியமும் நேர்மையும் இருந்தால் தயவுசெய்து டெஸ்டுக்கு வாங்க கணவரே’’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 More update

Next Story