’அதை பற்றி யோசித்தால் ஒரு அடி கூட முன்னேற முடியாது’ - நடிகர் தேஜா

’அனுமான்’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் தேஜா .
சென்னை,
குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி, தற்போது இளம் ஹீரோவாக பல வெற்றி படங்களை கொடுத்து வருபவர் தேஜா சஜ்ஜா. சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனக்கு எதிராக வந்த டிரோல்கள் மற்றும் தொழில் பிரச்சினைகளை பற்றி பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், ’ஒருவர் உடனேயே திரையுலகில் பெரிய ஹீரோவாக மாற முடியாது. நாம் நம்மை நிரூபிக்க வேண்டும். வாய்ப்புகள் கிடைக்கும் வரை நாம் துறையில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். உண்மையில், பெரிய ஹீரோக்களைக் கூட டிரோல் செய்கிறார்கள். தேசிய விருதுகளை வென்ற படங்களை விமர்சித்தவர்களும் இருக்கிறார்கள்.
இதுபோன்ற விமர்சகர்களின் விமர்சனங்களைப் பற்றி ஒருவர் உட்கார்ந்து யோசித்தால், அங்கிருந்து ஒரு அடி கூட முன்னேற முடியாது. நமது திறமையை நம்பி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும். சரியான நேரம் வரும்போது, நமது மதிப்பை அனைவரும் அறிவார்கள்’ என்றார்.






