ஓய்வை அறிவிப்பீர்களா? கரண் ஜோஹர் கேள்விக்கு ஷாருக்கான் பதில்

நடிகர் ஷாருக்கான் ஓய்வு குறித்து அசத்தலான பதிலைக் கூறியுள்ளார்.
ஓய்வை அறிவிப்பீர்களா? கரண் ஜோஹர் கேள்விக்கு ஷாருக்கான் பதில்
Published on

அபுதாபி,

2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் விழா அபுதாபியில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த மூன்று நாள் விழா இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர் விருதுக்கு ஷாருக்கான் தேர்வாகியுள்ளார். அட்லீ இயக்கத்தில் வெளியான 'ஜவான்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.

நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டு மேடையை ரசிக்கும்படியாக மாற்றினார். குறிப்பாக, நடிகர் விக்கி கௌஷலுடன் இணைந்து புஷ்பா படத்தில் இடம்பெற்ற, 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

தொடர்ந்து, நிகழ்வின்போது தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹருடன் ஷாருக்கான் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஷாருக், "சச்சின், சுனில் சேத்ரி, ரோஜர் பெடரர் போன்ற லெஜண்ட்களுக்கு எப்போது ஓய்வை அறிக்க வேண்டும் எனத் தெரியும்." என்றார்.

அதற்கு கரண் ஜோஹர், "பிறகு நீங்கள் ஏன் ஓய்வு முடிவை எடுக்கவில்லை" எனக் கிண்டலாகக் கேட்டார். அதைக்கேட்ட ஷாருக்கான், "நானும் தோனியும் வித்தியாசமான லெஜண்டுகள். முடிவை எடுத்த பிறகும் 10 ஐ.பி.எல் விளையாடுவோம்" என்றார். இதைக் கேட்ட பலரும் விசிலடித்து உற்சாகமளித்தனர்.

இதற்கிடையே, நடிகர் விக்கி கௌஷல், "லெஜண்டுகளுக்குத்தான் ஓய்வு. ராஜாக்கள் என்றுமே நிலையானவர்கள்" எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com