இளையராஜா பிறந்தநாள் - போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த 'இளையராஜா' படக்குழு

இசைஞானியின் பிறந்தநாளையொட்டி, 'இளையராஜா' திரைப்படம் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது
Ilaiyaraaja Birthday - 'Ilaiyaraaja' film team released poster and congratulated
Published on

சென்னை,

இசைஞானி இளையராஜா இன்று தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இசைஞானியின் பிறந்தநாளையொட்டி, 'இளையராஜா' திரைப்படம் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது பட நிறுவனம்.

தமிழ் திரையுலகில் இசை ஜாம்பவானாக வலம் வரும் இளையாராஜா வாழ்க்கை சினிமா படமாக உள்ளது. இப்படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்குகிறார். மேலும், இதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார்..

பிறந்தநாளையொட்டி இசைஞானி இளையராஜா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"பிறந்தநாள் வாழ்த்துகளை நீங்கள்தான் எனக்கு சொல்கிறீர்களே தவிர, எனது மகளை இழந்த துக்கத்தில் இருப்பதால், எனக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை. ரசிகர்களுக்காகத்தான் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம்; எனக்கு அது இல்லை. நன்றி... வணக்கம்" என்று உருக்கமாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com