அமெரிக்கா முழுவதும் ஒலிக்கும் இளையராஜாவின் 50வது ஆண்டு இசை கொண்டாட்டம்

சினிமாவில் தனது 50-வது ஆண்டு இசைப்பயணத்தை கொண்டாடும் வகையில் அமெரிக்காவில் இளையராஜா இசை கச்சேரிகளை நடத்தவுள்ளார்.
அமெரிக்கா முழுவதும் ஒலிக்கும் இளையராஜாவின் 50வது ஆண்டு இசை கொண்டாட்டம்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, கிட்டத்தட்ட 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்திருக்கிறார். மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருக்கிறார். கடந்த ஆண்டு லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி உலகரங்கில் தமிழராய் கவனம் ஈர்த்தார்.

இந்த நிலையில், சினிமாவில் தனது 50-வது ஆண்டு இசைப்பயணத்தை கொண்டாடும் வகையில் அமெரிக்காவில் இளையராஜா இசை கச்சேரிகளை நடத்தவுள்ளார். அதன்படி வருகிற ஆகஸ்டு மாதம் அமெரிக்கா மற்றும் கனடாவை உள்ளடக்கிய 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் இளையராஜா நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்.

மேலும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற டால்பி தியேட்டர் மற்றும் பே ஏரியாவில் உள்ள ஆக்லாந்த் அரேனா போன்ற முக்கிய மேடைகளிலும் இளையராஜாவின் இசை ஒலிக்கவுள்ளது. சரிகம மற்றும் மெர்குரி சார்பில் 'மியூசிக் பார் ஹீலிங்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை கச்சேரி மூலம் திரட்டப்படும் நிதியில் இருந்து ஒரு பகுதி, இசையின் மூலம் மனநலம் மற்றும் நலவாழ்வை மேம்படுத்தும் பணிகளுக்காக வழங்கப்பட இருக்கிறதாம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com