'டியூட்'-க்கு ரூ.50 லட்சம் பெற்றுக்கொண்டு அனுமதியளித்த இளையராஜா!

'டியூட்' படத்தில் இளையராஜாவின் "கருத்த மச்சான், 100 வருஷம்" ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
'டியூட்'-க்கு ரூ.50 லட்சம் பெற்றுக்கொண்டு அனுமதியளித்த இளையராஜா!
Published on

சென்னை,

நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்த 'டியூட்' திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த 'கருத்த மச்சான்', '100 வருஷம்' ஆகிய பாடல்கள் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் இளையராஜாவுக்கு சாதகமாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. டியூட் பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், உடனடியாக இந்த பாடல்களை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இதனால், டியூட் படத்தின் ஓடிடி வெளியீட்டிலும் இதன் தாக்கம் இருக்கும் என்பதால் டியூட் தயாரிப்பு நிறுவனம், இந்த விவகாரத்தில் இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் டைட்டில் கார்டில் நன்றி தெரிவிக்கப்படும் தெரிவித்திருந்தது. தொடர்ந்து இரு தரப்பினரும் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதால், வழக்கை முடித்து வைத்து நீதிபதி என்.செந்தில் குமார் உத்தரவு பிறப்பித்தார்.

அதனை தொடர்ந்து டியூட் படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ரூ.50 லட்சம் வழங்கி, இந்த வழக்கை சமரசமாக்கிக் கொண்டனர். ரூ.50 லட்சம் பெற்றுக்கொண்ட இளையராஜா "100 வருஷம்" மற்றும் "கருத்த மச்சான்" பாடல்களை படத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com