நடிகை வனிதா படத்திற்கு எதிராக இளையராஜா அவசர வழக்கு - என்ன காரணம்?


நடிகை வனிதா படத்திற்கு எதிராக இளையராஜா அவசர வழக்கு - என்ன காரணம்?
x
தினத்தந்தி 11 July 2025 12:32 PM IST (Updated: 24 July 2025 9:27 AM IST)
t-max-icont-min-icon

'மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சென்னை,

நடிகை வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகா தயாரிப்பில் 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் ராபர்ட் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அதாவது, 'மைக்கேல் மதன காமராஜன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ராத்திரி சிவராத்திரி' பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளனர். ராத்திரி சிவராத்திரி பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

1 More update

Next Story