துபாய் எக்ஸ்போவில் இளையராஜாவின் இசை கச்சேரி..!

'துபாய் எக்ஸ்போ 2020' நிகழ்ச்சியில் இளையராஜா இசை கச்சேரி நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
துபாய் எக்ஸ்போவில் இளையராஜாவின் இசை கச்சேரி..!
Published on

சென்னை,

கடந்த சில தசாப்தங்களாக தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய இசையால் ஆக்கிரமித்துள்ள இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு என இந்திய மொழிகளில் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது துபாயில் நடந்து வரும் பிரபலமான 'துபாய் எக்ஸ்போ 2020' நிகழ்ச்சியில் இளையராஜா இசை கச்சேரி ஒன்று நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த இசை கச்சேரி வருகிற மார்ச் மாதம் 5-ந்தேதி இரவு 9 மணிக்கு நடைபெற உள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்தப் பதிவில் அவர், 'வணக்கம் துபாய் எக்ஸ்போ 2020. இந்த கச்சேரியில் வந்து, நீங்கள் அனைவரும் விரும்பும் இசையால் நிரம்பிய பயணத்திற்கு, உங்களை அழைத்துச் செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். துபாய் எக்ஸ்போ 2020, மார்ச் 5-ந்தேதி இரவு 9 மணிக்கு, ஜூபிலி பார்க்கில் என்னுடன் கலந்து கொள்ளுங்கள்' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com