கோவையில் நடைபெற இருந்த இளையராஜா இசைக் கச்சேரி ஒத்திவைப்பு


Ilayarajas music concert scheduled to be held in Coimbatore postponed
x

கோவையில் வருகிற 17ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

கோவை,

இசைஞானி இளையராஜா தற்போது படங்களுக்கு இசையமைப்பது குறைந்துள்ளது என்றாலும் அடிக்கடி சில இடங்களில் இசைக் கச்சேரிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகிறார்.

அந்த வகையில் கோவையில் வருகிற 17ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கோவை மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும்நிலையில், இசை நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பாக். சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் சில காரணங்களுக்காக ஒத்திவைப்பட்டுள்ளது. மேலும், இந்த இசைக் கச்சேரி வருகிற 31-ம் தேதி நடைபெறும் என விழா ஏற்பாட்டாளர்கள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

1 More update

Next Story